பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும்!!

 
tn

பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியுள்ளது.

tn

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு கடந்த ஆண்டு ரொக்கத்துக்கு பதிலாக கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டுபொங்கல் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம்,ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

tn assembly

கடந்த ஆண்டைப் போலவே குடும்பஅட்டைதாரர்களுக்கு கரும்பு, வெல்லம்வழங்குவது குறித்து அரசு அறிவிக்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குபிறகு கரும்பு வழங்க உத்தரவிட்டதுபோல, வெல்லத்தையும் தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துவழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பில்சர்க்கரைக்கு பதிலாக நாட்டு வெல்லத்தை தந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.