கேரளாவில் ரெட் அலர்ட்- சபரிமலை சன்னிதானத்துக்கு 3 மணிக்கு மேல் செல்ல தடை

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக பட்டணத்திட்ட மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சபரிமலைக்கு 3 மணிக்கு மேல் சன்னிதானம் செல்ல தடை ஆறு மணிக்கு உள்ளாக பக்தர்கள் சன்னிதானத்தை விட்டு கீழே இறங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கேரள மாநிலம் சபரிமலையில் இன்று நிறை புத்தரி சிறப்பு வழிபாட்டுக்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய நிறைப்புத்தறி பூஜை காண ஏராளமான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்திருந்தனர் இந்த நிலையில் சபரிமலை அமைந்துள்ள பட்டணத்திட்ட மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் பக்தர்கள் மூன்று மணிக்கு மேல் சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,
மேலும் 6 மணிக்கு உள்ளாக சன்னிதானத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் கீழே இறங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் பம்பை ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது வழக்கமாக நிறைப்புத்தரி பூஜைக்காக திறக்கப்படக்கூடிய சபரிமலை சன்னிதானம் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும் தற்போது மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால் பக்தர்கள் அனைவரும் ஆறு மணிக்கு உள்ளாக சன்னிதானத்தை விட்டு கீழே இறங்கி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.