ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமா? ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
admk

ஈரோடு கிழக்கில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps

இதுக்குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 23.1.2023 - திங்கட் கிழமை முதல் 26.1.2023 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

tn