வேலூரில் வீட்டில் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் பலி

 
Death

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் வீட்டின் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

West Bengal: 19-year-old MBBS student jumps to death from 4th floor of  hotel in

வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு நகரில் இஸ்லாமியா தெருவை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் இரண்டு மாடி கட்டிடம் கட்டி வருகிறார். இதனால் வீடு கட்ட நீரை சேமிக்க பூமிக்கடியில் பெரிய அளவில் டேங்க் ஒன்றை கட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த தொட்டியை இன்று சுத்தம் செய்ய பாஸ்மார்க் பெண்டா கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன் (42) கொத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (45) ஆகியோர் பலியானார்கள்.

மற்றொரு கொத்தூரை சேர்ந்த முருகேசன் (43)  அவர்களை மீட்க சென்றார் ஆனால் மயங்கி தொட்டியில் விழுந்தார். தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தும் தீயணைப்புத்துறை வர தாமதமானதால் இரண்டு பேர் பலியானார்கள். ஒருவர் முருகேசன் கவலைக்கிடமான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கட்டிடம் அரசின் உரிய அனுமதியை பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.