ரஜினிக்கு இப்படி தவறான சிந்தனை இருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும்? சீமான்

 
ர்

சாதிதான் அறிவை தீர்மானிக்கிறது என்று பொருள்படும்படியாக ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  ரஜினியின் இந்த பேச்சுக்கு பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சீமானும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ர்ச்

கிரியா யோகா மூலம்  ‘இனிய வெற்றிகர வாழ்வு’ என்ற புத்தகத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்வில்  நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.  அந்த நிகழ்வில் அவர் பேசியபோது,  ‘’அறிவு என்பது புத்தி, சிந்தனை, நீ யார்? எங்கிருந்து வந்தாய்? சாதி.. என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான்’’என்றார். 

அடுத்ததாக,  ‘’பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்தவன் நான். ஆனால், 10 சதவீதம் கூட எனக்கு நிம்மதியோ சந்தோசமோ இல்லை. ஏனென்றால் சந்தோசமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல’’என்றார்.

இந்நிலையில்,  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததை கண்டித்தும்,  தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .

ர்ர்

அப்போது ரஜினிகாந்தின் இந்த சாதி குறித்த பேச்சு குறித்து கேட்டபோது ஆவேசமானார் சீமான்.  நடிகர் ரஜினிகாந்த் சாதியையும் அறிவையும் தொடர்புபடுத்தி  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,   சீமானும் கடுமையாக ரஜினியை விமர்சித்தார்.    பணம், புகழ்,பெயர் இருந்தும் தனக்கு பத்து சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார் ரஜினிகாந்த்.    இப்படி தவறான சிந்தனை இருந்தால் எப்படி நிம்மதி கிடைக்கும்? என்று கேட்டார்.