கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
school

கொல்லிமலை வட்டத்தில் உள்ள  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

rain school leave

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அத்துடன் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

school leave

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தொடர் மழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். முன்னதாக வால்பாறையில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.