16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் மீது குண்டாஸ்!

 
rape

அரியலூரில் 16 வயது  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் உட்பட 7 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது. 

தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்- 4 பெண்கள் மீட்பு ||  Tamil news Prostitution in an apartment in the t nagar 4 women rescued

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பலர் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சாந்தா உள்ளிட்ட சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில் உடந்தையாகவும், பலாத்காரம் செய்தவர்கள் எனவும் லாட்ஜ் உரிமையாளர் உள்ளிட்ட‌  4 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்ட‌ம் பாய்ந்தது.

இந்நிலையில் சாந்தா,சந்திரா, இந்திரா மற்றும்‌ திருமானூரை சேர்ந்த தெய்வீகன், கீழப்பழுவூரை சேர்ந்த வெற்றி கண்ணன், விகைகாட்டியை சேர்ந்த பிரேம், அரியலூரை சேர்ந்த மனோஜ்குமார் ஆகிய நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்திரவிட்டார்.