திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!

 
gold

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்தது.  கடந்தவாரத்தில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. ஆனால், சனிக்கிழமை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37 ஆயிரத்து 056-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து 4ஆயிரத்து 632-க்கு விற்பனை ஆனது.  அதைபோல வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி. 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.62.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.62,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.