“உங்க பேச்சை கேட்கவில்லையென்றால் பாஜக கூட்டணியிலிருந்து விலகுங்கள்”

 
Ramakrishnan

முதலமைச்சர் ரங்கசாமியின் பேச்சை பாஜக அமைச்சர்கள், மத்திய அரசு கேட்கவில்லையென்றால் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்து ஆளும் முதலமைச்சர் ரங்கசாமி வெளியேறி மாற்று கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் யோசனை தெரிவித்துள்ளார். 

ஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்ட  இந்தியா: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு | UN India acts in favor of Sri  Lanka in the ...

புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைத்து வரும் என்ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எதையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கான கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்ட நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் மட்டும் இதை புறக்கணித்து உள்ளார். 

கிட்டத்தட்ட ஒன்றறை ஆண்டுகள் இந்த ஆட்சி கடந்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய பாஜக அரசிடம் பேசி அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், முதலமைச்சர் ரங்கசாமியின் பேச்சை பாஜக அமைச்சர்களும், மத்திய அரசும் கேட்கவில்லை என்றால் பீகார் மாநிலத்தை போன்று, பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியேறி மாற்று கூட்டணி வைத்து தற்போது தனித் ஆட்சி அமைத்துள்ளது போல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்ய வேண்டும். மேலும் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ் ஐயும் வளர்க்கவே பாஜகவின் நோக்கம் என்றார்.