உதகையில் நீடிக்கும் உறைப்பனி பொழிவு

 
tn

உதகையில் நீடிக்கும் உறைப்பனி பொழிவு காரணமாக சமவெளி பகுதியில் ஜீரோ டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

tn

நீலகிரி மாவட்டத்தில் வருடந்தோறும் டிசம்பர், ஜனவரி ,பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் உறைபனி  தாக்கம் அதிகமாக காணப்படும்.  கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆண்டு முழுவதும் மழையின் தாக்கம் அதிகரித்து,  காணப்பட்ட நிலையில் டிசம்பர் மாதங்களில்  உறைபனி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  தற்போது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை  விளைச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் உதகை, கோத்தகிரி, குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு குறைவாக பொழியும் பனியால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பசுந்தேயிலைகள்  கருகி நாசம் அடைந்துள்ளன.  இந்த ஆண்டு தாமதமாக உறைபனி  துவங்கியுள்ள நிலையில் தேயிலை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

tn

இந்நிலையில்  மரங்கள், புல் வெளிகள் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல்  பனி காட்சி அளிக்கிறது. உதகை நகர், தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, அப்பர்பவானி,  உள்ளிட்ட பகுதிகளிலும்  உறைபனி நிலவுகிறது. உறைபனியை ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.