விசிக பிரமுகர் படுகொலையில் 2 தனிப்படைகள் அமைப்பு

 
மு

 விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்  பார்த்தசாரதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில்   இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அடுத்த மலையூர் கிராமம் .  இக்கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ஆற்காடு பகுதியின் விடுதலை சிறுத்தை பாசறை துணை அமைப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார்.   திருமணமாகாத இந்த  வாலிபருக்கும் அதே கிராமத்தில் உள்ள விடுதலை  சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. 

ப

 ஒவ்வொரு முறை தகராறின் போதும்,   உன் சாவு என் கையில் தான் என்று சொல்லி எச்சரித்து இருக்கிறார்.  இந்த நிலையில் நேற்று காலையில் பார்த்தசாரதி பைக்கில் சென்று இருக்கிறார் .  காலை எட்டு மணி அளவில் மலையூர் சுடுகாடு அருகே சென்ற போது மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள் . 

தகவல் அறிந்ததும் வேலூர் சரக டிஜஜி,  ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு,  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.   கைரேகை நிபுணர்,  மோப்பநாய் கொண்டும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

பார்த்தசாரதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,  இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தலைமறைவாக இருக்கும் விசிக பிரமுகர் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

 இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் பிடிப்பதற்காக இரண்டு அடிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.