"வாங்கோ வாங்கோ ஒன்னாகி" - அறிவின் குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்!!

 
tn

என்ஜாயி எஞ்ஜாமி பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ நாராயணன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

tn

கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் அறிவு எழுதி,  சந்தோஷ நாராயணன் இசையில் உருவான என்ஜாயி எஞ்ஜாமி பாடலை பாடகி தீ பாடினார்.  ஆனால் இந்நிகழ்ச்சியில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தெருக்குரல் அறிவு,  இப்பாடலை எழுதி கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி தான். இதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுக்கள் தரவில்லை .ஒரு வார்த்தையை கூட யாரும் தரவில்லை . கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தூங்காமல் கடுமையாக உழைத்திருக்கிறேன் என்றும் , நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம். கடைசியில் உண்மை தான் எப்போதும் வெல்லும் இன்று பதிவிட்டிருந்தார். பாடகர் அறிவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

tn
இந்த சூழலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வாங்கோ வாங்கோ ஒன்னாகி என்று  பதிவிட்டு என்ஜாயி எஞ்ஜாமி பாடல் உருவான விதம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில்,  இயற்கையை போற்றும் ஒரு தமிழ் பாடலை உருவாக்க வேண்டும் என்று தீ ஆசைப்பட்டாள் .  அறிவு மற்றும் தீ இருவரும் எஞ்சாமி என் சாமி பாடலை பாடினர்.  அதில் என்னுடைய பணி தயாரிப்பாளர் மட்டும் தான்.  தீ  , அறிவு மற்றும் நானும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் , கலைநேசத்திலும் ஒருங்கிணைந்தோம். என்ஜாயி எஞ்ஜாமி பாடலுக்கு வேறு யாரும் இசையமைக்கவும்,  பாடவும் வேண்டாம் என்று முடிவு செய்தோம் . இந்த பாடலுக்கான அடித்தளத்தை மிக நுணுக்கமாக தேர்ந்தெடுத்து,  பாடல் வரிகளுக்கான ஓட்டத்தையும்,  திரைக்கதைகள் உருவாக்கி பல நிஜ வாழ்க்கை கதைகளை உருவாக்கி அறிவுடன் பல மணி நேரம் செலவு செய்யப்படும் மணிகண்டனுக்கு எங்கள் குழு நன்றி தெரிவிக்கிறது. இந்த பாடலின் அனைத்து வருமானங்களும் உரிமையும் தீ, அறிவு மற்றும் எனக்கும் சமமாக பகிரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர் ,   செஸ் ஒலிம்பியாட் 2022 நிகழ்ச்சியில் தீ மற்றும் கிடக்குழி மாரியம்மாளின் என்ஜாயி எஞ்ஜாமி  பாடலை பாடினர். அறிவு அப்போது  வெளிநாட்டில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதை அவரே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்தார் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் தனது பதிவில் அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன் என்று பாராட்டியுள்ள அவர், எனது தளத்தை ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதற்காக  நான் எப்போதும் பயன்படுத்துகிறேன், எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். இந்த பாடல் குறித்து பொதுவெளியிலும், தனியாகவும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், என்னுடைய எண்ணம் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு வாங்கோ வாங்கோ ஒன்னாகி என்று பதிவிட்டுள்ளார்.