எட்டு வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்து கொலை -வட மாநில இளைஞருக்கு சாகும் வரை சிறை

 
c

எட்டு வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வட மாநில இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்  என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நிதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளிக்குச் சென்ற எட்டு வயது சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில்  தேடிப் பார்த்தும் தங்கள் மகளை காண முடியாததால் தவித்து வந்தனர்.   போலீசிலும் புகார் அளித்திருந்தனர்.   மறுநாள் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது.  

cc

 போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   பிரேத பரிசோதனை முடிவில் அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.   கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

 இந்த கொலையை  தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்ததில்,  சிறுமியின் கொலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்கிற 21 வயது இளைஞர் சிக்கினார். 

அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த சிவகாசி போலீசார்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் அந்த இளைஞரை ஆஜர்படுத்தினர்.   இது குறித்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.   வழக்கில் விசாரணைகள் நிறைவடைந்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மஜம் அலிக்கு சாகும் வரையிலும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.