அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

 
edappadi palanisamy

அதிமுக பிளவுப்படவில்லை என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Former Tamil Nadu CM Edappadi K Palaniswami hits back at BJP leader VP  Duraisamy- The New Indian Express

நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக அரசு வழங்கியது. இந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசால் வழங்க முடியுமா? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதிமுகவை பிளவுபடுத்த வேண்டுமென்ற முதலமைச்சரின் கனவு நிறைவேறாது. 2026 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்குவரும். 2024ல் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும்.

அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதியை வென்றுள்ளோம். இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இந்திருக்கும். சற்று உழைப்பு குறைவு காரணமாக இன்று ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார். அரசியல் என்பது முள்ளும் மேடும், பள்ளங்களும் நிறைந்துள்ள கடினமான பாதை அதில் பயணம் செய்வதென்பது சாதாரண விசயமல்ல.தமிழகத்தில் விரைவில் எங்கள் கொடி பறக்கும்” எனக் கூறினார்.