கிழக்கு திசை காற்றும் தெற்கு திசை காற்றும் சந்திப்பு - இடி, மின்னலுடன் மழை பெய்யும்

 
c

வங்கக் கடலில் வரும் ஒன்பதாம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக கூடும்.  இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம் .

தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது.   இதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழைக்கும் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

rr

 கிழக்கு திசை காற்றும் தெற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்றைக்கும் நாளைக்கும் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ,  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் புதுக்கோட்டை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் காரைக்கால் ஆகிய பதினாறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருக்கிறது .

வரும் ஒன்பதாம் தேதி தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி குறைந்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.  அதன் பின்னர் பத்தாம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு ,புதுச்சேரி கடற்கரையை நோக்கி அது நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின்  காரணமாக தமிழ்நாட்டிற்கு மீண்டும் கன மழைக்கு ஆன வாய்ப்பு இருக்கிறது என்றும் ,  காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப் பகுதியை நோக்கி நகரும் போது தான் அது எந்தப் பகுதிக்கு வரும் அதன் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியவரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.