மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைவு - முதல்வர் இரங்கல்

 
tn

மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

பிரபல மூளை நரம்பியல் மருத்துவரும்,  மதுரை எய்ம்ஸ் தலைவருமான டாக்டர். நாகராஜன் மாரடைப்பு காரணமாக காலமானார்.  மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை தலைவராகவும் , சென்னை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல்சார் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். கர்நாடகாவின் பெங்களூர் தேசிய மனநல அகாடமி உறுப்பினராகவும் , மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நெறிமுறை குழு தலைவராகவும் , நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாவின் இயக்குனர் தேர்வு கமிட்டி தலைவராகவும் நாகராஜ் செயல்பட்டு வந்தார்.  இந்த சூழலில்  மருத்துவர் நாகராஜ் நள்ளிரவு 12 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  

tn
 

இதுக்குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மூத்த நரம்பியல் மருத்துவர் திரு. நாகராஜன் வெங்கட்ராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் அவர்கள்,  மதுரை AIIMS மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.