சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மருத்துவர்

 
rape

விளாத்திகுளத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் செல்லும் சாலையில் பத்மநாதன் மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார். இவரது மகன் ராபின்சன் (43) 
சித்த மருத்துவம் படித்துவிட்டு தற்போது மருத்துவமனையை நடத்தி வருகிறார். ராபின்சன்  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது மருத்துவமனைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத மூன்று வயது மகனை அழைத்துக் கொண்டு பெண் ஒருவர் சென்றுள்ளார்.  அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை செய்வது போல்  அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் ராபின்சன் இதனை அப்பெண் கண்டித்த போது ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக மருத்துவர் ராபின்சன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம்
காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து மருத்துவர் ராபின்சனை கைது செய்தார்.
கைதான ராபின்சன் ஏற்கனவே 2015ஆம் ஆண்டில்  ஒரு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசுவல் FTP SEND