வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!

 
ttn

கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.  சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு பொதுமக்கள்  சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

tn

இருப்பினும் சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.  கடந்த 1ஆம் தேதி முதல் பக்தர்கள் மலை ஏற வனத்துறை தடை விதித்தது. வறட்சி காரணமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது

tn

 இந்நிலையில் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் கடந்த 6ஆம் தேதி முதல் மலை மீது பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர்.  மலை மீது தீ பிடிக்க கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வழக்கமாக செல்லக்கூடிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்.  பாதை தவறி கும்பலாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல கூடாது , வனவிலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ள வனத்துறை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.