திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு

 
tn

கடந்த 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஆளுநர் ரவி நிகழ்த்திய உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.  இந்த நிகழ்வு  தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த சூழலில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதிக் கொடுத்தபடி படித்திருந்தால்,  அவர் காலில் பூ போட்டு அனுப்பி இருப்போம்.  ஆனால்  இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் கவர்னரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது.  அரசியலமைப்பு சட்டத்தை சொல்லித்தானே பதவி ஏற்றார் என்று திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக திமுக பேச்சாளர் மீது காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்தது. ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின் பேரில், அவதூறு வழக்கு தொடர அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அத்துடன்  திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

tn
இந்நிலையில் ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆளுநர் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ள  நிலையில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.