பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 
sச்

மாலத்தீவின் தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டிடம் மட்டுமல்லாமல் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவி பெரும் விபத்து ஏற்பட்டது .  பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மு

 இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.  எட்டு இந்தியர்களில் மூன்று பேர் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது.  இதில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனிஸ்- சுந்தரி தம்பதியும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்திருக்கிறது. 

 இதை அடுத்து கன்னியாகுமரி தொகுதியின் எம்பி விஜய் வசந்த் ஜெனிஸ் -சுந்தரி குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

 மாலத்தீவின் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து முதல்வர் இரங்கல் வெளியிட்டுள்ளார்.  அவர்,  மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.  இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் இந்திய குழு உடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.