ஏ.ஆர்.ஆர்.பிலிம்சிட்டியில் மரணம்: போலீசார் வழக்குப்பதிவு!!

 
tn

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சி ஐயர் கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஆர்.ஆர் ஃபிலிம்ஸ் ஸ்டுடியோ அமைந்துள்ளது.  இங்கு வெப்பன் திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட வந்தன.  இதற்கான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில்,  நேற்று காலை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த குமார் என்ற கேமரா மேன் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.  

tn

இதனால் பதறிப்போன  சக ஊழியர்கள் அவரை  உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

tn

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஏ.ஆர்.ஆர் ஃபிலிம் சிட்டியில் தொழில்நுட்பக் கலைஞர் குமார் உயிரிழந்த சம்பவத்தில் ஜம்பு கிரேன்ஸ்  சந்திரசேகர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தலைமுறைவாக உள்ள இருவரையும் கவரப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்