சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இதை செய்யமாட்டார்கள் - தயாநிதி மாறன்

 
dayanidhi

திமுக எம்.பி. தயாநிதி மாறன் இன்று விமானத்தில் பயணம் செய்த நிலையில், அவருக்கு எமெர்ஜென்சி எக்சிட் கதவு அருகே இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு எமெர்ஜென்சி எக்சிட் கதவு அருகே இருக்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் எமெர்ஜென்சி எக்சிட் கதவின் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்த அவர் தனது பயணம் குறித்து, டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  


அந்த வீடியோ பதிவில், வணக்கம், வாழ்க தமிழ்நாடு. நான் இன்று கோவைக்கு இண்டிகோ விமானத்தில் செய்கிறேன். எனக்கு கிடைத்த இருக்கை எமர்ஜென்சி கதவு அருகேயுள்ள இருக்கை. ஆயினும் நான் எமர்ஜென்சி கதவை திறக்கப்போவதில்லை. அப்படி திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல் இதை திறந்தால் பயணிகளுக்கு ஆபத்து. இதனால் சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். இது மட்டுமில்லாமல் அந்த கதவை திறந்தால் தனக்கு மட்டுமில்லாது அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் தாமதமாகும். எனவே தன்னை போன்று அனைவரும் விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.