#BREAKING முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!

 
arivalayam

ஜூலை 17ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

tn

குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு குறித்து கடந்த மாதம் அக்கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் , டி ஆர் பாலு  ஆகிய முன்னணி  தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுகவுக்கு 133 எம்எல்ஏக்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மொத்தம் 34 எம்பிக்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் யஸ்வந்த் சின்ஹா  கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.
 

 

tn

இந்நிலையில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜூலை-16 அன்று நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டம் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை , அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்" நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.