"ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும்" - கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

 
ks alagiri

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று  கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

election

கடந்த  2021 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர்  திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். சமீபத்தில் மாரடைப்பு காரணமாக எம்எல்ஏ திருமகன் ஈவேரா உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்பநிலையில்  டுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.

ks alagiri

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும். அது எங்களுடைய தொகுதி.   கூட்டணி கட்சி தலைவர்களை இன்று மாலை சந்திக்க உள்ளோம். வேட்பாளர் யார் என்பது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார். முன்னதாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.