சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை என புகார்

 
karamadai temple fest

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய  அனைத்து நேரங்களிலும் அனுமதிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. 

Sami darshan by devotees at the Chidambaram Natarajar Temple Kanakasabai |  சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் தற்போது அனைத்து நேரங்களிலும் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை என புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது சரியான முறையில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்து வைக்கவில்லை என புகார் கூறியுள்ளார். மேலும் கோயிலைச் சேர்ந்த தர்ஷன் தீட்சிதர் என்பவரும் ஜெயசீலா என்பவரும் தீட்சிதர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரில், நடராஜர் கோயிலில் அனைத்து நேரங்களிலும் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும். அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி நடராஜர் கோயிலில் விசாரணை நடத்தினார். கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை சரிவர அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.