எடப்பாடி பழனிசாமி கோஷ்டிக்குள் கைகலப்பு! வால்பாறையில் பரபரப்பு

 
admk

வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0646c6admk2_0601chn_3


வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து, வால்பாறை பூங்கா, படகு இல்லத்தை முறைப்படுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அரசு அறிவித்த சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொழிற்சங்கம், கோஆப் வங்கி தலைவருமான  அமீது கோஷ்டிக்கும், நகர செயலாளர் மயில்கணேஷ் கோஷ்டிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்ட வாகனத்தில் ஏற முயன்ற அமீதுவை கீழே தள்ளி அவமரியாதை செய்ததால் இரு கோஷ்டிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மேடையாக அமைக்கப்பட்ட வாகனத்தில் இருந்து கெட்ட வார்த்தையுடன் செருப்பு வைத்து அடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். எடப்பாடி கோஷ்டிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் மாலையில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில கோஷ்டி மோதல் ஏற்பட்டு கைகலப்பு எற்பட்டதால் எம்.எல்.ஏ அதிர்ச்சியடைந்தார்.