#BREAKING முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை!!

 
mkstalin

முதலமைச்சர் நலமாக உள்ளதாக சென்னை காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

mk Stalin biopic

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  உடற்சோர்வு சற்று இருந்ததன் காரணமாக  பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், இதன் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.  இதை தொடர்ந்து நேற்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது.


tn

 

இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது"என்று குறிப்பிட்டுள்ளார்.