சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா!!

 
ttn

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் முதல் முறையாக சென்னையில் இந்த ஆண்டு நடைபெற்றது.  கடந்த 12ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் துவங்கிய நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இரட்டையர் பிரிவில் லூயிசா ஸ்ட்பானி , கேப்ரிலேயா டப்ரோவ்ஸ்கி இணை, ஆனா லின்கோவா நடிலா ஜலாமிட்ஸ் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். இதில்  6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் ஆனா லின்கோவா - ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடியை வீழ்த்தி, கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி -  லூயிசா ஸ்டெபானி ஜோடி  கோப்பையைக் கைப்பற்றியது.

tn

ஒற்றையர்  பிரிவின் இறுதிப் போட்டியில் 17 வயதான லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்..இப்போட்டியை முதல்வர்  மு.க. ஸ்டாலின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கண்டுகளித்தார்.  பின்னர் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன் , மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ராசா, தயாநிதிமாறன்,  விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.  

tn

போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற லிண்டாவுக்கு சுமார் ரூ.26.50லட்சமும், 2-வது இடம் பிடித்த மக்டா லினெட்டுக்கு சுமார் ரூ.15.77 லட்சமும், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.9.58 லட்சமும், 2-ம் இடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.5.35 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.