ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரயில்வே அறிவிப்பு..

 
தெற்கு ரயில்வே

ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து  சென்னை, தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது, “ரயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.7 முதல் 12 ஆம் தேதி வரை மதுரை - செங்கோட்டை  இடையிலான ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  மதுரை - விழுப்புரம் விரைவு ரெயில், நவ.8, நவ.10-12, நவ. 28-30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில், நவ.18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே

கோவை - நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை - குருவாயூர் விரைவு ரெயில் நவ.22, 25, 26ல் தாமதமாக நெல்லை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.30 ஆம் தேதி மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும். நவ.22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது” என்றும்  தென்னக ரெயில்வே குறிப்பிட்டுள்ளது.