சசிகலா வளர்த்த காளை பாலமேடு ஜல்லிக்கட்டில் சீற்றம் - துவம்சம்

 
sஅ

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பராமரிப்பில் வளர்க்கப்பட்ட காளை பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களை துவம்சம் செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

 மதுரையில் மேலூர் சின்னக்கரம்பட்டியைச் சேர்ந்த செல்வராணி என்கிற பெண்மணியின் காளை சசிகலாவின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது.  இந்த காளையை பராமரிக்க 2 லட்சம் ரூபாய் செலவில் சசிகலா கொட்டகை அமைத்து கொடுத்திருக்கிறார்.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு இந்த காளை களமிறங்கியது .  தன்னை அடக்க வந்த வீரர்களை சீற்றத்துடன் முட்டி தள்ளி அடங்காத காளையாக அரங்கத்தில் வலம் வந்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது இந்த காளை.  வெற்றி பெற்றது.

ஜ்

 அதே நேரம் பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒன்பது காளைகளை அடக்கி சாதனை புரிந்த நிலையில் அதன் பின்னர் காளை அடக்கிய போது படுகாயம் அடைந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் உயிரிழந்த செய்தியை அறிந்ததும்,  திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் அரவிந்த் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்ததும் சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,   மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர் அரவிந்தராஜ் 9 காளைகளை அடக்கி சாதனை புரிந்த நிலையில் அதன் பின்னர் காளைகளை அடக்கிய போது படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தப்பட்டேன்.  அதேபோல திருச்சி மாவட்டத்தில் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டினை காண வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் எதிர்பாராத விதமாக மாடு முட்டி படுகாயம் அடைந்து உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தப்பட்டேன்.

 உயிரிழந்த அரவிந்தராஜ், அரவிந்த் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.