#Breaking: குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் நாளை சந்திப்பு...

 
tn assembly


நாளை குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற உள்ளது..

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே  நீண்டகாலமாக  ஒரு மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருவதால் தமிழக அரசியலில்  பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அண்மையில் கூட சட்டப்பேரவை கூட்டத்தொடரில்,  தமிழ்நாடு அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்காமல், சில வார்த்தைகளை தவிர்த்தும், சேர்த்தும் வாசித்துள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. ஆளும் திமுக  உள்பட திமுக கட்சிகள், பாமக,  மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. முன்னதாகவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக தலைவர்கள் முன்வைத்து வருகின்றன.

Draupadi Murmu 1

இந்நிலையில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை  தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் நாளை சந்திக்க உள்ளனர். இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,   திமுக எம்பிக்கள் டி .ஆர். பாலு,  ஆ. ராசா , என்.ஆர். இளங்கோ , வில்சன் ஆகியோர் குடியரசு தலைவரை சந்திக்க இருக்கின்றனர்.. அரசியல் சாசனத்தை மீறி செயல்படும் ஆளுநருக்கு உருகி அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்து,  பிரதிநிதிகள் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்..