#Breaking : அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல ஓபிஎஸ் திட்டம் - ஜே.சி.டி.பிரபாகர் தகவல்..

 
#Breaking :  அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல ஓபிஎஸ் திட்டம்  - ஜே.சி.டி.பிரபாகர் தகவல்..

ஜூலை 11-ஆம் ஆண்டில் நடந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்றும்  உத்தரவு பிறப்பித்திருந்தார்.  தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை  எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கில்,   2  நீதிபதிகள் கொண்ட அமர்வு   அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்துன் உத்தரவிட்டது.  இதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும்  முடிவாகியுள்ளது.

admk office attack
 
இதற்கிடையே  சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெறும் அதே வேளையில்  ஓபிஎஸ், தனது  ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதனையடுத்து  வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இருதரப்பும் நீதிமன்றத்தை நாடின. பின்னர் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றுமாறும், அதன் சாவியை பழனிசாமியிடம் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  

admk office

 இந்த விவகாரங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் செல்லாமல் இருந்தனர்.  இந்நிலையில் இன்று  எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிமுக அலுவலகத்திற்குச் சென்றார்.  இந்த நிலையில் பன்னீர் செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக  அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்திருக்கிறார்.    ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு அளித்துள்ளார்.

admk

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,   அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும். ஒருங்கிணப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ஜூலை 11 அன்று ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் சென்ற போது, அங்கு இபிஎஸ் ஆதரவாளர் வன்முறையில் ஈடுபட்டதால் அலுவலகத்திற்கு சீல் வைக்கும் நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம், ஆதரவாளர்களுடன்  அதிமுக அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அப்போது ஒருங்கிணைப்பாளார் , நிர்வாகிகள், அவரது ஆதரவாளர்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்ல பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். செல்லும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும். ஒபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. ஒபிஎஸ் மனம் வருந்தும் படி இபிஎஸ் பேசுவதை கண்டிக்கிறோம்” என்று  கூறினார்.