#Breaking : தங்கம் விலை அதிரடியாக உயர்வு.. ஒரே நாளில் ரூ.424 அதிகரிப்பு.

 
gold


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து , ஒரு சவரன்  ரூ.38,160 க்கு விற்பனை  செய்யப்படுகிறது.  

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகபட்ச  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.   ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியான உயர்வை எட்டுவது  வாடிக்கையாகிவிட்டது. பின்னர் அவ்வப்போது  இறங்குமுகமும் காட்டுவதுண்டு.  இதற்கிடையே  கடந்த சில வாரங்களாக தங்கம் விலை  குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும்  மகிழ்ச்சியை அளித்தது.  தங்கத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.  அவ்வப்போது உயர்வைக்  கண்டாலும் பெரிய அளவிலான மாற்றமில்லாம் இருந்தது.  இந்நிலையில் இந்த வாரத்திலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை சரிவு

நேற்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்  ரூ.37,736 ஆகவும்,  ஒருகிராம்  கிராமுக்கு  ரூ.4,717 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்துள்ளது.  இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.4,770-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல்  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 காசுகள் உயர்ந்து ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.