வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

 
b

வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.  வாழைப்பழம் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதில் அந்த குழந்தை உயிரிழந்திருக்கிறது .  திண்டுக்கல் மாவட்ட மக்களிடையே இச் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

by

 திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாகுல் அமீது.    இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்திருக்கிறது.   வழக்கம் போல குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து இருக்கிறார்கள்.   சாப்பிட்டுவிட்டு அந்த குழந்தைக்கு வாழைப்பழம் கொடுத்து உள்ளார்கள்.  

 அந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண் விழி பிதுங்கி இருக்கிறது.   அப்போதுதான் வாழைப்பழம் தொண்டையில் சிக்கி இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.   இதனால் பதறிப் போன பெற்றோர்,  உடனே குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் .

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.    இதைக் கேட்டு பெற்றோர் கதறி அழுதிருக்கிறார்கள். வாழைப்பழம் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மருத்துவமனையில் இருந்தவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. 

c

 பொதுவாக குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை வாழைப்பழம் கொடுக்கக் கூடாது.   அப்படியே கொடுத்தாலும் அதை கையால் நன்றாக பிசைந்து கூழாக்கி கொடுக்க வேண்டும்.   வாழைப்பழத்தை முழுதாக கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்  மருத்துவர்கள்.    மேலும்,  பழத்தால் இவ்வளவு பெரிய ஆபத்து இதுவரைக்கும் நிகழ்ந்தது இல்லை.   இது அறிய நிகழ்வு என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்.

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றர்.