சைதை சாதிக்கை அடுத்து ராஜீவ்காந்தி.. முதல்வரின் மவுனத்திற்கு பாஜக கண்டனம்

 
sr

மாற்று கட்சியில் இருக்கும் பெண்களை கேவலமாக விமர்சித்த தி முகவின் பேச்சாளரையடுத்து, நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், மாற்று கருத்துகளை கொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல்.தியாகராஜன் அவர்களை தேச துரோகி என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி வசை பாடியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் தமிழக பாஜகவின்  துணைத்தலைவரும் ஊடகப்பிரிவின் மாநில பொறுப்பாளருமான நாராயணன் திருப்பதி. 

s

அவர் மேலு,  28 வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்து, நம் தேசத்தின் பாதுகாப்பிற்காக பாடுபட்ட போது ஒரு கண்பார்வையை பெரிதும் இழந்துள்ள ஒரு ராணுவ அதிகாரியை எடுத்தெரிந்து, அவதூறாக, அவமரியாதையாக பேசியுள்ளது ஃ பாஸிஸ  திமுகவின் அராஜக, ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், இது போன்று பேசுபவர்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் வியாபாரத்திற்காக, பரபரப்பிற்காக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கு பெற வைப்பதும் இவர்கள் தரம் தாழ்ந்து பேசுவதை ஊக்குவிக்கிறது என்கிறார். 

சில மாதங்களுக்கு முன் பிராமண சமுதாயத்தையே இன அழிப்பு செய்திருக்க வேண்டும் என்று இதே ராஜிவ் காந்தி பேசியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பெண்கள் குறித்தும், ராணுவ அதிகாரிகள் குறித்தும், சிறுபான்மை சமுதாயங்கள் குறித்தும் திமுகவினர் தரம் காழ்ந்து பேசி வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், முதல்வரின் மௌனம் திமுக வினரை மேலும் உற்சாகமடைய செய்வதோடு அவதூறுகளையும், தரம்தாழ்ந்த கருத்துகளையும் பொது வெளியில் அனைவரும் முகம் சுளிக்கும் வகையில் அள்ளித் தெளித்து வருகின்றனர். 

இந்த நபர்கள் மீது இதுவரை சட்ட ரீதியாகவோ,கட்சி ரீதியாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்காது இருப்பதே திமுக பெண்களுக்கு எதிரான, சாதி விரோத, தேச விரோத கட்சியாகவே அடையாளம் காணப்படும் என்கிறார் அழுத்தமாக.