தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வெட்கக்கேடு- குஷ்பு

 
Kushboo

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

Image


கோவையில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பாஜக சார்பில் நடந்த ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, “தமிழ்நாடு, தமிழகம் இரண்டுமே எனக்கு ஒன்றுதான், இடத்திற்கு ஏற்றார்போல் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், எப்படி அழைத்தாலும் தமிழ்நாடு இந்தியாவின் அங்கம்தான். மும்பையில் பிறந்திருந்தாலும் நானும் தமிழச்சிதான், ஆளுநர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். எல்லா பெண்களும் பாஜகவையே வெளியே போகவில்லை. இரு சிலர் கட்சியிலிருந்து போவதால் பாதுகாப்பு இல்லை என கூறமுடியாது. அண்ணாமலை துணிச்சலான தலைவர். முந்தைய தலைவர்கள் போல் இல்லை. அண்ணாமலை துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.


தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வெட்கக்கேடானது. பிச்சை போடுவதுபோல ஆயிரம் ரூபாய், ஒரு கரும்பு கொடுக்கிறார்கள். இதற்கு அவர்கள் கொடுக்காமல் இருக்கலாம். சுயமரியாதை ஆட்சி எனக் கூறும் திமுக ஆட்சியில் சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழனும் இதை வேண்டாம் என்றுதான் சொல்லுவார்கள்