நீங்கள் ’கோபேக் மோடி’சொல்லலாம், நாங்கள் 'கோபேக் ராகுல்’சொல்லக்கூடாதா? - அர்ஜூன் சம்பத் கேள்வி

 
arjun sampath

பிதமர் மோடியின் வருகைக்கு எதிராக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக கோபேக் மோடி என்று கூறிய நிலையில், நாங்கள் கோபேக் ராகுல் என கூறுவதில் என்ன தவறு என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.  

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: 'பாரத் ஜோடோ' பாதயாத்திரைக்காக ராகுல் தமிழகத்திற்கு வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க 'கோபேக் ராகுல்' இயக்கத்தை அறிவித்தோம். இதற்காக ரயிலில் கன்னியாகுமரி சென்றபோது போலீசார் என்னை கைது செய்தனர். தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது 'கோபேக் மோடி' இயக்கத்தை நடத்தியது. ராகுலுக்கு எதிராக நாங்கள் செய்யக்கூடாதா? எங்கள் போராட்டங்களை தடை செய்யகாரணம் என்ன?தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு முழுமையாக அதிருப்தி நிலவுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதை இந்து விரோதமாக கருதுகிறோம். அவரது மனைவி துர்கா கோவில்களில் பூஜைகள் செய்வதை வரவேற்கிறோம். வரும் 2024 தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவர். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.