தமிழ்நாடு அரசின் 10 விருதுகள் அறிவிப்பு

 
assembly

தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டின் திருவள்ளுவர் விருது, 2022-ஆம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

mkstalin

ஜனவரி 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கவுள்ளார். மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும்,எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கு வழங்கப்படவுள்ளது. தந்தை பெரியார் விருது கவிஞர் கலி.பூங்குன்றனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது முனைவர் இரா. மதிவாணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.