இந்திய வரலாற்றில் ஒரு அமைச்சர் மக்கள் மீது கல் எறிவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?- அண்ணாமலை

 
annamalai

திருவள்ளூர் அருகே  முதல்வர் ஸ்டாலின் பங்குபெறும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.  

na

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்காருமிடம், முதல்வர் பங்கேற்கும் மேடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சர் நாசர், தொண்டர் ஒருவரிடம் உட்காருவதற்கு நாற்காலியை எடுத்துவர சொன்னார். அப்போது நாற்காலி எடுத்து வர தாமதமானதால் கோபமடைந்த அமைச்சர் நாசர், கட்சி தொண்டர்களை ஒருமையில் பேசியதுடன், அவர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக இருக்கும் நாசர், பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்திய வரலாற்றில், ஒரு அமைச்சர் மக்கள் மீது கல் எறிவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா?. அதுவே திமுக அமைச்சர் நாசர், விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுவது கண்ணியம் இல்லாத செயல், அமைச்சருக்கு இது அழகு இல்லை. மக்களை அடிமைகளைப் போல் நடத்துவதுதான் திமுக” எனக் குறிப்பிட்டுள்ளார்.