மத்திய அரசின் செயல் மகிழ்ச்சி அளிக்கிறது - அண்ணாமலை

 
Annamalai

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொல்லியியல் துறை அனுமதியோடு சுதந்திரத்திற்க்காக போராட்டம் நடத்திய சங்ககிரி மலைக்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

Image

சேலம் மாவட்டம் சங்ககிரி யில் உள்ள மலைக் கோட்டையில் சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அவரது உருவப்படம் வைத்து தமிழக அரசு சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து ஈரோடு பிரிவு ரோட்டில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தூண் அமைந்துள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தீரன் சின்னமலை திப்பு சுல்தான் உடன் சேர்ந்து போரிட்ட சங்ககிரி மலைக்கோட்டை சிறப்புமிக்க ஒரு இடம் இந்த இந்த இடத்தில் அஞ்சலி செய்வது ஒரு சிறப்பான செயல். வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நாட்டின் 75வது சுதந்திர தினம் இந்த சுதந்திர தினத்தில் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய இடத்தில் தொல்லியல் துறை அனுமதியுடன் மத்திய அரசு தேசியக்கொடி ஏற்ற அனுமதி அளித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.