இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட நினைப்பவர்கள் மத்திய அரசிடம் சேர்க்கலாம்- அண்ணாமலை

 
annamalai

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி பொருள்களை வழங்குவதற்கு ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தார். மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதத்தின் வாயிலாகவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

K Annamalai replaces L Murugan as BJP Tamil Nadu chief | The News Minute

இதனிடையே இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று இலங்கை தலைநகர் கொழும்பிற்கு சென்றார். 

 

 


இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் “பிரதமர் நரேந்திர மோடி அரசு பில்லியன் பில்லியனாக இலங்கைக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது!  உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் உள்ளவர்கள், அந்த உதவியை மத்திய அரசிடம் சேர்க்கலாம். மத்திய அரசு தமிழக அரசின் உதவியையும் தவறாமல் சேர்க்கும்” எனக் கூறினார்.