சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த மூதாட்டி

 
மூதாட்டி

சங்கரன்கோவிலில் சாலை விரிவாக்கம் பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த கோமதி என்ற மூதாட்டி சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலை விரிவாக்க பணி தற்போது சங்கரன் கோயிலில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்ற வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் பெரும்பாலான பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.

இந்நிலையில் அவ்வழியே சென்ற கோமதி என்ற மூதாட்டி பள்ளத்தில் தவறி விழுந்ததார். உடனடியாக மூதாட்டியை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாலை விரிவாக்கம் பணியானாலும், குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆனாலும் பணிகளை வேகமாக முடித்து தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.