சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது!

 
tn

போகி பண்டிகையையொட்டி சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. 

bhogi

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகி பண்டிகை தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டடப்படுகிறது. போகி திருநாளில் பழைய பொருட்களை மக்கள் தீயிட்டு கொளுத்துவர். இந்த சூழலில் போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre), ரப்பர் ட்யூப் (Rubber Tube) மற்றும் நெகிழி (Plastic) ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திட வேண்டும் எனவும், அதனை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிடவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது. அதன்படி பொதுமக்களிடமிருந்து சுமார் 100 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தெரிவித்தது. இந்நிலையில்  போகி பண்டிகை சென்னையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு நூறைத் தாண்டியது . மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

Bhogi

போகி பண்டிகையை ஒட்டி பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் சென்னையில் காற்று மாசு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணிநேரம் நிலவரப்படி காற்று மாசு அளவு ஆலந்தூரில் 155,  பெருங்குடி 113 , கொடுங்கையூர் 94,  மணலி 87 , அரும்பாக்கம் 86 , வேளச்சேரி 84 , ராயபுரம் 82 என காற்றின் மாசு அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக பிளாஸ்டிக் டயர்களை எரிப்பதை தவிர்க்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.