#Breaking அதிமுக பொதுக்குழு தொடங்கியது!

 
tn

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி கூடிய நிலையில் ஓபிஎஸ்-சால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

இந்நிலையில் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுக செயற்குழுவில் 16 வரைவு தீர்மானங்களை பொன்னையன் வாசித்தார்.  பொன்னையன் வாசித்த 16 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது அதிமுக செயற்குழு . இதையடுத்து அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

tn
முன்னதாக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அறிந்த பின்னரே  எடப்பாடி பழனிசாமி வானகரம் மண்டபத்தில் பொதுக்குழு மேடை ஏறியது குறிப்பிடத்தக்கது.