என்னிடமிருந்து 2 கைப்பேசிகளை மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது- விஜயபாஸ்கர்

 
vijayabaskar

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் என்னிடம் இருந்து இரண்டு கைபேசியை மட்டுமே கைப்பற்றினர் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளனர்.

DVAC raids 13 places belonging to former Tamil Nadu Health Minister  Vijayabaskar- The New Indian Express

வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக சான்றிதழ் வழங்கியது தொடர்பாக,சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு தொடர்பான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னை அடையற்றில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இது மாதிரியான சோதனை நடைபெறும் காலங்களில் இதனை எல்லாம் எதிர்கொள்ளக்கூடிய நல்ல மன வலிமையை எங்கள் அம்மா கற்றுக் கொடுத்துள்ளார். அதனால் மகிழ்ச்சியோடு இந்த சோதனையை எதிர்கொண்டு இருக்கிறோம்.காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனையில் நான் குடியிருப்பது அடுக்குமாடி  குடியிருப்பு 3 அறைகள் ஒரு ஹால் என 2 ஆயிரம் ஸ்கொயர் பீட் இதில் 12 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். ஒரு முழுமையான திமுகவின் அரசு எந்திரத்தை எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் தனி நபர் மீது கொண்ட காட்டத்தால் கால் புணர்ச்சி உச்சகட்டத்தில் பிரதிபலிப்பாக இந்த சோதனையை நான் கருதுகிறேன். என்னிடமிருந்து 120க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து என்னுடைய கைப்பேசி ஒன்றும் வீட்டின் கைபேசி என இரண்டு கைபேசிகளை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர்.

அரசுக்கு எவ்வளவோ பணிகள் இருந்தும் அரசு எந்திரங்களை இப்படி பயன்படுத்துவது மிகவும் கவலையாக உள்ளது.உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் உள்ளது. ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்கு என்ன விதிமுறைகளை பின்பற்றி இருக்கிறோமோ அதே விதிமுறையை பின்பற்றி நாங்கள் No objection certificate கொடுத்துள்ளோம். எங்களுக்கு மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் ஆட்சேயபனம் இல்லை. யாரு தொடங்கினாலும் இது அடங்கும். நான் சொல்வது வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும் அரசு மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும் மக்கள் நல்வாழ்வு துறையை பொறுத்த வரை we are giving only no objection certificate எங்களுக்கு ஆட்சேபனம் இல்லை என்ற சான்றுதளை மட்டுமே வழங்குகிறது. மற்றபடி அனைத்துமே மத்திய அரசு அனுமதி கொடுப்பது மத்திய அரசும், எம்ஜிஆர் பல்கலைக்கழகமும் தான்.  தற்போது கூட no objection certificate திமுக அரசு கொடுத்துள்ளது அதற்கு ஓரு வழக்கு பதிவும் போடலாம், வேல்ஸ் கல்லூரி மீது வழக்கு பதிவு செய்தால் அதேபோல 11 அரசு மருத்துவக் கல்லூரிக்கும் சான்றிதழ் வழங்கியுள்ளோம் அதற்கும் வழக்கு பதிவு செய்யலாம் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.