கூட்டணி தொடர்பாக பேச்சு வரும் போது யாரும் பழனிசாமியை நம்ப மாட்டார்கள்- புகழேந்தி

 
Pugalendhi

கோவை காந்திபுரம் தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை  சந்தித்தார். 

Pugalendhi

அப்போது பேசிய அவர், “ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை ஒரு வாரம் நன்கு விசாரித்துள்ளனர் எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசான ஓபிஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வரும்.  சசிகலா காலில் விழாதவர்கள் அவர்களை பற்றி பேச வேண்டும். பணம் கையில் இருக்கிறது என்று ஆடுகிறார்கள். 

கூட்டணி தொடர்பாக பேச்சு வரும் போது யாரும் எடப்பாடி பழனிச்சாமியை  நம்ப மாட்டார்கள். ஓபிஎஸ் எப்போதும் இணைப்புக்கு தயார். ஓபிஎஸ்  சாதகமாக தீர்ப்பு வந்தால் ஒற்றுமைக்கே வழி வகுப்போம், பிரிவினையை யாரும் விரும்ப மாட்டார்கள். லோக்சபா தேர்தளுக்காக இரு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்துவதாக பொய்யான தகவல்கள் பரவுகின்றன. ஜெயலலிதாவிற்கு பிணை கொடுக்கும் வாய்ப்பு கிடைத்ததே எனக்கு போதும், பதவிகள் ஏதும் தேவை இல்லை எனக் கூறியவர் ஓபிஎஸ். அதிமுக ஒன்று சேர வேண்டும் என ஒபிஎஸ் நினைக்கிறார் என்பதன் காரணமாகதான் அவருடன் உள்ளேன்” என தெரிவித்தார்.