திருமணமான 25 நாட்களில் மாரடைப்பு - ராணுவ வீரர் பரிதாப பலி!!

 
rtn

திருமணமான 25 நாட்களில் இளம் ராணுவ வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tn

 குமரி மாவட்டம் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பிச்சவிளை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் ராணுவத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்காக கடந்த ஆறாம் தேதி இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  திருமணம் கடந்த 21ஆம் தேதி நடந்து முடிந்தது . விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்ப இருந்த சரவணனுக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

tn

 இதனால் சுயநினைவு இழந்த அவரை உடனடியாக அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இருப்பினும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கருங்கல் போலீசாருக்கு  தகவலளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆச்சாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  திருமணமான 25 நாட்களில் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.