கொடைக்கானல் அருவியில் புகைப்படம் - தவறி விழுந்த இளைஞரை தேடும் பணி தீவிரம்!!

 
tn

புல்லாவெளி அருவியில்  ஆபத்தான இடத்தில் புகைப்படம் எடுத்த போது  இளைஞரை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tn

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள நீரோடுகளிலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இந்த சூழலில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற 28 வயதான இளைஞர் ஒருவர் கொடைக்கானல் கீழ்மலை கிராம தாண்டிக்குடி,  மங்கலம் கொம்பு மலை கிராமப் பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.  இவர் பெரும்பாறை  அருகே உள்ள புல்லாவெளி அருவியில்  தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

tnn

 அப்போது ஆபத்தான முறையில் பாறைகளில் நின்று புகைப்படம் எடுக்கும்  போது எதிர்பாராத விதமாக கால் தவறி அவர் அருவின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமானார்.  இதை தொடர்ந்து மாயமான இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அருவியில்  நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாண்டிக்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது நண்பர்கள் கேமராவில் பதிவு செய்த இறுதி நிமிட பதைபதைக்கும்  காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.