சிதம்பரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. மாரடைப்பால் உயிரிழப்பு

 
tn

சிதம்பரத்தில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

death

சிதம்பரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. மகேந்திரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் அவருக்கு வயது 58. இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அதிகாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து  சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சக போலீசாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.