தேங்காய் நார் மில்லில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

 
parents

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வெல்லூர் அருகே தேங்காய் நார் மில்லில் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai couple on flight from Australia finds baby dead on arrival | The  News Minute

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார்மில் வைத்து நடத்தி வருகிறார். இவரது நார் மில்லில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பச்சாராம், மனிஷாதேவி தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை ஆண் குழந்தை பிரினுகுமார் நேற்று மாலை மனிஷாதேவி, தேங்காய் நார்மில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது தாயின் மடியில் உட்கார்ந்திருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக பரினுகுமார் தாயின் மடியிலிருந்து இறங்கி தவழ்ந்து சென்று ஒடும் மிஷின் அருகே சென்றுள்ளார்.அப்போது அவன் மிஷினில் சிக்கியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த பரினுகுமாரை,  அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.